பெய்ரூட் துறைமுகத்தில் நிகழந்த வெடிவிபத்து தொடர்பாக 3 பேருக்கு இன்டர்போல் அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் துறைமுக கிடங்கில் வைக்கபட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியது
இந்த வெடி விபத்து உலக அளவில் பதட்டத்தை ஏறபடுத்தியது. மோல்டோவாவை சேர்ந்த சரக்கு கப்பல் 2,750 டன் அமோனிய நைட்ரேட்டை ஏற்றிக் கொண்டு ஜாா்ஜியாவிலிருந்து மொஸாம்பிக்கு 2013- வந்தது
அபோது , கப்பலில் ஏற்பட்ட பழுதால் பெய்ரூட் துறைமுகத்தில் கப்பல் நின்றது.
அந்தக் கப்பல் உரிமையாளா் திவால் ஆகிவிட்டதால், அதன் உரிமையாளர் அதனை கைவிட்டாா்.
மேலும், அதிலிருந்த அமோனியம் நைட்ரோட் துறைமுகக் கிடங்கில் 6 வருடத்தை கடந்து மேல் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், அந்தக் கிடங்கில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு ரஷியர்களுக்கும் ஒரு போர்ச்சுகீசியருக்கும் இன்டர்போல் அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் பெய்ரூட் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலின் முன்னாள் கேப்டன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.