அமெரிக்க உயிரியல் பூங்காவில் 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா பாதிப்பு!

Author
Irumporai- inWorld
Report

அமெரிக்காவின் விலங்குகள் பூங்காவில் உள்ள கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் சான்டிகோவில் உள்ள விலங்குகள் பூங்காவில் பொது மக்கள் செல்ல கடந்த டிசம்பர் 6-ந் தேதி தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் பூங்காவில் உள்ள 2 கொரில்லா குரங்குகளுக்கு கடந்த வாரம் இருமல் ஏற்பட்டது. இதையடுத்து கொரில்லா குரங்குகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு குரங்குகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. அறிகுறி இல்லாத பூங்கா ஊழியர்களிடம் இருந்து கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மனிதர்களுக்கு பரவி வரும் கொரோனா தொற்று தற்போது விலங்குகளுக்கும் கடந்த சில நாட்களாக பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.