காட்டுக்கு ராஜானாலும் எனக்கு தூசுதான் என மாஸ் காட்டிய நாய்

Author
Praveen Rajendran- inWorld
Report

இரண்டு சிங்கத்தை குரைத்து விரட்டியடித்த நாயின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

காட்டுக்கு ராஜா ஆனாலும் மிகவும் சோம்பேறி சிங்கம் தான். ஆனால் அந்த சிங்கத்தின் உருவத்தை பார்த்தாலே பார்ப்பவர்ளுக்கு பயத்தை ஏற்படுத்தும். இந்த நிலையில் நாய் ஒன்று சிங்கத்தை எதிர்த்து ஓடவிட்டுள்ளது. ஒன்றல்ல இரண்டு சிங்கத்தை.

பர்வீன் கஸ்வான் என்ற ஐஎப்எஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், பார்வையாளர்கள் ஜீப்பில் நின்று வீடியோ எடுக்க, அவர்களை பின்தொடர வரும் சிங்கத்தை அங்கிருக்கும் நாய் துணிச்சலுடன் சண்டையிட்டு துரத்துகிறது.

அதுவும் ஒரு சிங்கமல்ல. இரண்டு சிங்கங்களை நாயின் குலைக்கும் சத்தத்தோடு துணிச்சலான சண்டையால் பயந்து போன சிங்கங்கள் அங்கிருந்து பின் வாங்குகின்றன. இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து

”வாழ்க்கையிலும் இந்த அளவுக்கு நம்பிக்கை தேவை” என்று தன்னம்பிக்கையூட்டும் விதமாக பகிர்ந்திருக்கிறார், அவர். பலரும் இதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து நாயின் துணிச்சலை பாராட்டி வருகிறார்கள்.