சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா இன்று உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்து வருகிறது.
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து வந்துவிட்ட நிலையிலும் கொரோனா பரவல் தீவிரமாக அதிகரித்து வருகிறது.
ஆனால் சீனாவில் ஆரம்ப கட்டத்தில் தீவிரமாக பரவிய கொரோனா பின்னர் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது.
கொரோனா பரவத் தொடங்கிய வூகார் மாகாணத்தில் சீனா மிகக் கடுமையாக ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்திருக்கிறது. இன்று மட்டும் 115 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இது ஜூலை மாதத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிக அதிகமான பாதிப்பாகும். இதனால் நான்கு நகரங்களை மீண்டும் முடக்கியுள்ளது சீன அரசு.