ஜோ பைடன் பதவியேற்கும் முதல் நாளில் செய்ய உள்ள விஷயங்கள் என்னென்ன?

Author
Mohan Elango- inWorld
Report

அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட குழப்பங்கள் தனிந்து வருகிற 20-ம் தேதி ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பதவியேற்க உள்ளனர்.

தேர்தல் முடிவுகளை மாற்ற ட்ரம்ப் செய்த அனைத்து சதி வேலைகளும் தோல்வியில் முடிந்தன. இதனைத் தொடர்ந்து ஜோ பைடன் அதிபராக பதிவியேற்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் பதவியேற்ற முதல் நாளில் பல்வேறு அதிரடியான விஷயங்களை செய்ய உள்ளார் ஜோ பைடன்.

அதில் ட்ரம்ப் செய்த பல்வேறு விஷயங்களையும் மாற்ற இருக்கிறார். அதன்படி பருவநிலை மாற்றத்திற்கான பாரீஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய இருக்கிறார்.

அதோடு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குப் பயணிக்க விதிக்கப்பட்ட தடையையும் பின்வாங்க இருக்கிறார்.

மேலும் 100 நாட்களுக்கு முகக்கவசம் அணிவதை கட்டாயம் ஆக்கும் சட்டத்தையும் கொண்டு வர உள்ளார்.

கொரோனா முடக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க புதிய நிவாரணங்களையும் அறிவிக்க உள்ளார்.