அமெரிக்காவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து இலவசம்: பைடன் அறிவிப்புக்கு குவியும் பாராட்டுகள்

Author
Mohan Elango- inWorld
Report

கொரோனா வைரஸ் வந்து ஒரு வருடம் ஆகியும் வீரியம் குறையாது உலகை ஆட்டிப்படைத்து வருகிறது.

இதற்கிடையே கொரோனா வைரஸின் பல புதிய வகைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

மறுபுறம் கொரோனா தடுப்பு மருந்து அவசர அனுமதி வழங்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

அதே சமயம் கொரோனாவால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா அதிலிருந்து மீள்வதற்கு போராடி வருகிறது.

புதிய அமெரிக்க அதிபராகப் பதவியேற்க உள்ள ஜோ பைடன் கொரோனாவை எதிர்கொள்ள பல அதிரடி திட்டங்களை அறிவிக்க உள்ளார்.

அதில் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்குவது, பரிசோதனைகளை அதிகரிப்பது போன்றவை உள்ளன.

அதில் ஒரு பகுதியாக அமெரிக்காவில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதில் அகதிகள் உட்பட அனைவரும் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு பலத்த வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.