அதிரடியாக அதிபர் பதவியை தொடங்கினர் ஜோ பைடன்: முதல் நாளே 17 உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்

Author
Praveen Rajendran- inWorld
Report

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற முதல் நாளிலே 17 முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார் ஜோ பைடன்.

அமெரிக்காவின் 46வைத்து அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடன் அவர்கள் நேற்று தனது பதவியை வாஷிங்டனில் மக்கள் முன்னிலையில் ஏற்றார், அவரோடு துணை அதிபராக தேர்வான இந்தியா வம்சாவளியை சேர்ந்த கமல் ஹாரிஸும் தனது பதவியை ஏற்றார்.

இந்த நிலையில் பதவி ஏற்ற முதல் நாளான இன்று 17 முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து கையெழுத்திட்டார் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன்.

அதில் கொரோனா நெருக்கடி, குடியேற்றம், இனவாத பிரச்சனை உள்ளிட்ட 17 முக்கிய உத்தரவுகளில் பைடன் கையெழுத்திட்டுள்ளார் . இதில் கொரோனா நோய்த்தடுப்பு விஷயத்தில் அமெரிக்க மத்திய அரசின் நடவடிக்கையை அதிகரிப்பது தொடர்பான உத்தரவில் முதலில் கையெழுத்திட்டார்.

அதன்பின்னர், அமெரிக்க-மெக்சிகோ எல்லைச் சுவர் கட்டுமானம் நிறுத்தம், அமெரிக்கா-கனடா இடையிலான எரிவாயு இணைப்பு திட்டமான, கீஸ்டோன் எக்ஸ்.எல். பைப்லைன் திட்டம் ரத்து உள்ளிட்ட உத்தரவுகளில் அவர் கையெழுத்திட்டார்.

பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது தொடர்பான டிரம்ப் நிர்வாகத்தின் முந்தைய உத்தரவை மாற்றி, பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார்.

அதன்படி, பதவியேற்ற முதல் நாளிலேயே அதற்கான உத்தரவிலும் கையெழுத்திட்டார்.பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்காவில் வாழும் சுமார் 11 மில்லியன் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் எளிதாக குடியுரிமை பெறுவதற்கான நடவடிக்கையை ஜோ பைடன் மேற்கொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது. குடியுரிமை பெறுவதை எளிதாக்கும் சட்ட மசோதாவை அறிமுகம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.