"இந்த முறை எந்த பிழையும் நிகழாது": மலாலாவுக்கு தீவிரவாதிகள் கொலை மிரட்டல்

Author
Praveen Rajendran- inWorld
Report

பெண் கல்விக்காக குரல் கொடுத்து வரும் மலாலாவுக்கு தாலிபான் தீவிரவாதிகள் டுவிட்டரில் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

பாகிஸ்தானில் பெண்கல்விக்காக போராடி நோபல் பரிசு வென்ற மலாலாவுக்கு டிவிட்டரில், தலிபான் தீவிரவாதி கொலை மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் குண்டு பாய்ந்து காயமடைந்த மலாலா, பின்னர் சிகிச்சை பெற்று குணமடைந்தார். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்ற தலிபான் தீவிரவாத அமைப்பின் முன்னாள் செய்திதொடர்பாளர் இஷானுல்லா இசான் கைது செய்யப்பட்ட நிலையில், 2020ஆம் ஆண்டு பாகிஸ்தான் சிறையில் இருந்து தப்பிவிட்டான்.

இந்நிலையில் டிவிட்டரில் மலாலாவை தொடர்பு கொண்ட அவன், ”இந்த முறை எந்த பிழையும் ஏற்படாது” என கொலை மிரட்டல் விடுத்த நிலையில், காவல் பிடியில் இருந்து அவன் தப்பியது எப்படி என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மலாலா கேள்வி எழுப்பி உள்ளார்.