உலகின் மிகப்பெரிய திட்டத்தை குஜராத்தில் அமல்படுத்த அம்பானி திட்டம்

Author
Praveen Rajendran- inWorld
Report

குஜராத்தில் உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்கா அமைக்க அம்பானி திட்டம்.

குஜராத்தில் உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவை அமைக்க ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளார்.

இந்த திட்டத்தின்படி உயிரியல் பூங்காவில் கொமொடோ டிராகன்கள், சிறுத்தைகள், பறவைகள் ஆகியவற்றைக் காட்சிக்கு வளர்க்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திட்டத்தை விரைவாக நிறைவேற்றி 2023ஆம் ஆண்டில் பூங்காவைத் திறக்க உள்ளதாகக் கூறிய அவர், திட்ட மதிப்பீடு உள்ளிட்ட விவரங்களை வெளியிட மறுத்துவிட்டார்.